There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
காஷ்மீர் - எவ்வளவு அழகான பெயர், பெயருக்கேற்றார்போல் அவ்வளவு அழகு நிறைந்த ஓர் அற்புத நிலப்பரப்பு அது. ஆனால் அதன் வரலாறோ அத்தனை அழகானது கிடையாது. அதன் பள்ளத்தாக்குகள் முழுக்க ரத்தத்தின் சிகப்பு பூசப்பட்டுள்ளது. அதன் வெள்ளைப்பனி மலைகளில் பல மக்களின் கண்ணீர் துளிகளே அங்கு வெள்ளைப்பனி மலைகளாக மாறியுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கடந்த காஷ்மீரகத்தின் கண்ணீர் கதையை எந்த சமரசமும் சார்பும் இல்லாமல் அலசும் தொகுப்பு இது.
இந்தியர்கள் இந்துக்களா?
ஒவ்வொரு மதமும் யாரோ ஒரு ஞானம் அடைந்த ஞானி அதை நிறுவியப் பின்னரே வளர்ந்திருக்கும்.ஆனால் இந்துமதம் அப்படி அல்ல, அதுதான் இந்து மதத்தின் அழகியல் அதேவேளை அதுதான் இந்து மதத்தின் ஆணி வேரையும் நமக்கு அடையாளப்படுத்துகிறது. “இந்து மதம் எப்படி உருவானது?”, “எப்படி இந்தியா முழுமைக்கும் பரவியது?” என்ற கேள்விக்களுக்கான பதில் “இந்து மதம் என்றால் என்ன?” என்னும் கேள்வியில் புதைந்துள்ளது. அந்த ஒற்றைக்கேள்விக்கான பதில் தேடி அலைந்தால் நமக்கு சுள்ளென எழும் இன்னொரு முக்கிய கேள்வி “உண்மையில் நாம் இந்துக்களா?” – என்பதுதான். அதற்கான பதில் இந்த காணொளித் தொகுப்பில் கிடைக்கும்.